/* */

கடலூரில் ஏற்றுமதியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்.

கடலூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் ஏற்றுமதியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கடலூரில் ஏற்றுமதியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்.
X

கடலூரில் நடைபெற்ற ஏற்றுமதியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கடலூர் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் ஏற்றுமதியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் கடலூரில் பிரபல தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த ஏற்றுமதிக்கு உகந்த பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டு ஏற்றுமதியாளர்கள் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சியர் பாலகப்பிரமணியம் துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் 2020-21- நிதியாண்டில் தமிழகத்தியிருந்து ஒட்டுமொத்த ஏற்றுமதி 25.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளதாகவும், கடலுார் மாவட்டத்தில் செப்டம்பர் -2020-மார்ச் 2021 காலகட்டத்தில் ரூ.529.05 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், நமது பொருட்களை உலகம் முழுவதும் கொண்டு சென்று உலக நாடுகளை தமிழகம் நோக்கி வரவைப்போம் என முதல்வர் கூறியதன்படி, கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்களான தொழில்துறை இரசாயனங்கள். வேளாண் சார்ந்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள், முந்திரி பகுப்பு, மதிப்புக் கூட்டப்பட்ட பயாப் பொருட்கள், மண்பாண்டங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்/பொம்மைகள் போன்றவற்றின் மூலம் மாவட்டத்தை ஏற்றுமதி மையமாக உருவாக்கும் முயற்சியை விரைந்து எடுக்க வேண்டும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வெங்கடேசன், மாவட்ட வளர்ச்சி மேலாளர்(நபார்டு வங்கி) குறு சிறு நிறுவனங்களின் அமைப்பு தலைவர் அசோக், சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஜி ஆர் கே துரைராஜ் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Sep 2021 4:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!