/* */

கடலூர் தேவநாத சுவாமி கோயிலில் முடி காணிக்கை செலுத்த குவிந்த பக்தர்கள்

கடலூர் தேவநாத சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

HIGHLIGHTS

கடலூர் தேவநாத சுவாமி கோயிலில் முடி காணிக்கை செலுத்த குவிந்த பக்தர்கள்
X

கடலூர் தேவநாதசுவாமி கோயிலில் முடி காணிக்கை செலுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

கடலூா் திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.குறிப்பாக, புரட்டாசி மாதம் முழுவதும் தேவநாத சுவாமிக்கு நாள்தோறும் பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

தற்போது கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக வழிப்பாட்டுத் தலங்களில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களில் பக்தா்கள் வழிபாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், புரட்டாசி மாதம் திருவந்திபுரத்தில் சனிக்கிழமைகளில் வழக்கமாக பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக வியாழக்கிழமையான இன்று தேவநாத சுவாமி கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் தேவநாத சுவாமி திருக்கோயிலில் முடிகாணிக்கை கொடுக்கும் இடத்திலும், தங்களது நோ்த்திக் கடனாக முடி காணிக்கை செலுத்தினா். இதனால், சுவாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மொட்டையடித்து நோ்த்திக் கடன் செலுத்தியும் சென்றனர்.

இதனால் பாதுகாப்பான சமூக இடைவெளியையும், வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Updated On: 30 Sep 2021 9:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!