/* */

கடலூர் மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடி கட்டி ஆர்ப்பாட்டம்

கடலூரில் மீனவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

கடலூர் மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடி கட்டி  ஆர்ப்பாட்டம்
X

கடலூரில் படகுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

மீன் வளத்தை பெருக்க ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது, கடந்த ஜூன் மாதம் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலில் மீன்பிடிக்கச் சென்ற இழுவலையை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்பிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிக குதிரை திறன் உள்ள இயந்திரங்களைக் கொண்டும், 40 எம்எம் அளவிற்கும் குறைவான வளையங்களைப் பயன்படுத்தி மீன் பிடிக்க வேண்டும், ஐந்து நாட்டிக்கல்குள் மீன் பிடிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்தது.

கட்டுப்பாடுகளை மீறி மீன்பிடித்த மீனவர்களின் படகுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 5 மாதமாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்த ஐபி வகை விசைப்படகு மீனவர்கள் இன்று தங்கள் படகுகளில் கறுப்புக் கொடி கட்டி, கடலூர் முதுநகரில் உள்ள மீன்வளத் துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் ஓ.டி சிங்காரத்தோப்பு, சோனங்குப்பம் அக்கரைக்கோரி, என 15க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் ஒருங்கிணைந்து இழுவலை மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரியும், ஆளும் தி. மு. க. அரசு அனுமதிக்க வேண்டும் எனவும், விசைப்படகு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கையில் பதாகைகளை ஏந்தி பெண்கள், குழந்தைகள் என மீனவ குடும்பங்கள் தமிழக அரசை கண்டித்தும், மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்காதே என கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து மீனவர்களின் கோரிக்கையை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மீனவர்கள் மனுவாக அளித்தனர். அடுத்த வருடம் 2022க்குள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் மீனவர்கள் எச்சரித்தனர்.

Updated On: 27 Dec 2021 12:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்