/* */

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்

HIGHLIGHTS

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்
X

தமிழகத்தில் தற்போது கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் இன்று காலைமுதல் 14 நாட்களுக்கு முழு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

அந்த வகையில் முதல் நாளான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. சென்னையின் நுழைவாயிலான செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை பெரிய வணிக நிறுவனங்கள் தொடங்கி சிறிய கடைகள் வரைக்கும் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

பொது போக்குவரத்தை பொறுத்தவரை முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, பரனூர் சுங்கச்சாவடி மையங்கள் அனைத்தும் வாகன போக்குவரத்து ஏதும் இல்லாமல் இருந்தன.

இருப்பினும் செங்கல்பட்டு வழியாக பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மிககுறைவாக தான் இருந்தது. சுங்கச்சாவடியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். இதில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்ததாக 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீசார் நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பினர்.

Updated On: 10 May 2021 4:52 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  2. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  3. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  6. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  7. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  8. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  9. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  10. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா