/* */

ஞாயிறு முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்

ஞாயிறு முழு ஊரடங்கு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்

HIGHLIGHTS

ஞாயிறு முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி ஆட்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகின்றன. அவசர தேவை இல்லாமல் செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் காவல்துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடைகள் அடைக்கப் பட்டுள்ளன. ஆட்டோ, டாக்சி மற்றும் கார், இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடின. காய்கறி சந்தை கடைவீதி மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளன.

சுற்றுவட்டார இடங்களில் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இன்று முகூர்த்த நாள் என்பதால் இ-பாஸ் பெற்று செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக அதிகளவு போக்குவரத்து இருக்கும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

மருந்து மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்த இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 25 April 2021 1:35 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்