/* */

தொடர் மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 57 ஏரிகள் 100% நிரம்பின

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் மழை பெய்துள்ள நிலையில், 57 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.

HIGHLIGHTS

தொடர் மழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 57 ஏரிகள் 100% நிரம்பின
X
கோப்பு படம் 

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடந்த ஆறு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில விவசாய பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.

தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளது இதில் 57 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன. 75 சதவீதத்துக்கு மேல் 62 ஏரிகளும், 50 சதவிகிதத்திற்கு மேல் 129 ஏரிகளும் 25 சதவீதத்திற்கு மேல் 213 ஏரிகளும், 25 சதவிகிதத்துக்கும் கீழ் 67 ஏரிகள் நிரம்பி உள்ளன. தொடர்ந்து ஏரிகளின் நீர்வரத்தை கவனித்து வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் பொதுப்பணித்துறை சார்பிலும், நீர்வள ஆதாரத்துறை சார்பிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 5 Nov 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி