/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பின

தொடர்ந்து பெய்த கனமழையால், செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பியது

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பின
X

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடந்த ஆறு தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது.நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக, பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில விவசாய பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன. தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு, நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளது இதில் 61 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.

மேலும், 75 சதவீதத்துக்கு மேல் 65 ஏரிகளும், 50 சதவிகிதத்திற்கு மேல் 128 ஏரிகளும், 25 சதவீதத்திற்கு மேல் 207 ஏரிகளும், 25 சதவிகிதத்துக்கும் கீழ், 67 ஏரிகள் நிரம்பி உள்ளன. தொடர்ந்து ஏரிகளின் நீர்வரத்தை கவனித்து வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும், பொதுப்பணித்துறை சார்பிலும், நீர்வள ஆதாரத்துறை சார்பிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated On: 6 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  3. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  5. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  6. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  7. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  8. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  10. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...