/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் ராகுல்நாத் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
X

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசு தொழிற்பேட்டை மைதானத்தில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தேசியகொடியை ஏற்றி வைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மை துறை சார்பில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 189 பேருக்கு ரூ.3லட்சத்து 79 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், சாலை விபத்தில் உயிரிழதோருக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணமும், 5 பேருக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீட்டிற்கான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

மேலும், தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் மூன்று பேருக்கு ரூ. 24 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி மற்றும் மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, தையல் எந்திரம் வேளாண்மை இடுபொருட்கள், விசைத்தெளிப்பான், மின்மோட்டார், டிராக்டர் என மொத்தம் 313 பயனாளிகளுக்கு மொத்தம் 58 லட்சத்து 77 ஆயிரத்து, 9000 ரூபாய் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

Updated On: 15 Aug 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்