/* */

கூடுவாஞ்சேரியில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூட்டத்தில் தாக்குதல்

கூடுவாஞ்சேரியில் பாஜக தேசிய மகளிரணி தலைவி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்ட கூட்டத்தில் பெண் மீது தாக்குதல் நடைபெற்றது.

HIGHLIGHTS

கூடுவாஞ்சேரியில் எம்எல்ஏ வானதி சீனிவாசன்   கூட்டத்தில்  தாக்குதல்
X

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்த பிஜேபி கூட்டம்

தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தற்போது உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்ப மனு வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பின்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது மீனாட்சி என்பவர் மீது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதால் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கட்சி நிர்வாகிகள் அந்த பெண்ணை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மீண்டும் திரும்பி வந்த அப்பெண் மண்டபத்திற்குள் நின்று கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவி கலந்துகொண்ட நிகழ்வில் பெண் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 15 Sep 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!