/* */

அதிமுக உட்கட்சி தேர்தல்- செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று தொடக்கம்

அதிமுக உட்கட்சி தேர்தல், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று தொடங்குகிறது.

HIGHLIGHTS

அதிமுக உட்கட்சி தேர்தல்- செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று தொடக்கம்
X

ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். 

தமிழகம் முழுவதும், அதிமுக கிளை நிர்வாகிகள், பேரூராட்சி வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான உட்கட்சி தேர்தல் இன்று (13.12.2021) முதல், 23.12.2021 வரை நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்..

இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு மாவட்டச் செயலாளர் சிட்லப்பாக்கம் இரேஜேந்திரன் தலைமையில், காட்டாங்குளத்தூர், பரங்கிமலை ஆகிய 2 ஒன்றியங்களில் உள்ள 17 இடங்களில் உட்கட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தல் பொறுப்பாளர்களாக, தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிபிரகாசம், கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் சங்கரதாஸ், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத்தேர்தலில் ஒன்றியம், மற்றும் பேரூராட்சிகளுக்கு ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், தலைமையிலும், நகராட்சியில் நகர செயலாளர் செல்ந்தில் தலைமையிலும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல் பொறுப்பாளர்கள் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஆதிபிரகாசம், கழக அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் சங்கரதாஸ், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

Updated On: 13 Dec 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  3. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  6. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  9. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!