/* */

அரியலூரில் மகளிர் சுயஉதவிக்குழு ஆண்டு விழா கொண்டாட்டம்: 17 பேருக்கு தங்கக்காசு

அரியலூரில் மகளிர் சுயஉதவிக்குழு 12ம் ஆண்டு விழாவில் 17 உறுப்பினர்களுக்கு தங்கக்காசு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூரில் மகளிர் சுயஉதவிக்குழு ஆண்டு விழா கொண்டாட்டம்: 17 பேருக்கு தங்கக்காசு
X

பொங்கல் பண்டிகை பரிசாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் புடவையும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.

அரியலூரில் 12 வருடமாக செயல்பட்டு வரும் நேதாஜி மகளிர் சுய உதவி குழு, தனது 12 ஆவது ஆண்டு தின விழாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடியது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழிகாட்டுதலுடன் ஜீவா மகளிர் சுய உதவிக்குழு மற்றும் நேதாஜி மகளிர் சுய உதவி குழு என இரண்டு குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இரண்டு மகளிர் குழுக்களிலும் பெரும்பாலோனோர் அரியலூர் நகராட்சியில் சுகாதாரப் பணி செய்யும் தொழிலாளர்கள் ஆவார்கள்.

நேதாஜி மகளிர் சுய உதவி குழுவின் 12வது ஆண்டு விழாவான இன்று இக்குழுவின் லாபத் தொகையில் அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் 2 கிராம் தங்கக்காசு வீதம் 17 பேருக்கு வழங்கப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகை பரிசாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் புடவையும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.

குழுவின் நோக்கங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் டி. தண்டபாணி அவர்கள் விளக்கிப் பேசினார். சுபிக்சா தொண்டு நிறுவன அமைப்பாளர் மகேஸ்வரி கலந்துகொண்டு இக்குழு மூலம் தங்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு ஒத்துழைப்பு கொடுத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமானூர் ஒன்றிய செயலாளர் ஜி. ஆறுமுகம் கலந்துகொண்டு உறுப்பினர்களை பாராட்டி வாழ்த்தி பேசினார்.

Updated On: 12 Jan 2022 5:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!