/* */

வாக்காளர் சுருக்க முறை திருத்தப் பணிகளை சிறப்பு பார்வையாளர் ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் சுருக்க முறை திருத்தப் பணிகளை சிறப்பு பார்வையாளர் ப.மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வாக்காளர் சுருக்க முறை திருத்தப் பணிகளை சிறப்பு பார்வையாளர் ஆய்வு
X

அரியலூரில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாமை  சிறப்பு பார்வையாளர் ப.மகேஸ்வரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


1.1.2022 ம் நாளை தகுதி நாளாகக் கொண்டு அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக வாக்காளர் சிறப்பு திருத்த முகாம்கள் நடைபெற்றது. அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் உள்ளிட்ட முகாம்களில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு சுருக்க முறை திருத்தப் பணிகளை வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ப.மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

வாக்காளர் பட்டியல் குறித்து அனைத்து விதமான சந்தேகங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் வாக்காளர் உதவி மைய கட்டணமில்லா தொலைபேசி எண்.1950-ஐ தொடர்பு கொள்ளலாம். மேலும், 044-25674302 என்ற தொலைப் பேசியிலும், 9445252243 என்ற செல்போன் எண்ணிலும், er22maptk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்கலாம் என்றார்.

தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் ப.மகேஸ்வரி, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த இரு நிகழ்வின் போது மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், கோட்டாட்சியர்கள் அரியலூர் ஏழுமலை, உடையார்பாளையம் அமர்நாத், தேர்தல் வட்டாட்சியர்கள் ஸ்ரீதர் (தேர்தல்), அரியலூர் ராஜமூர்த்தி, ஜெயங்கொண்டம் ஆனந்தன், ஆண்டிமடம் முத்துகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 15 Nov 2021 5:35 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  4. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  5. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  7. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  9. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  10. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?