/* */

கிராமங்கள் தோறும் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

அரியலூ்ர் மாவட்டம் முழுவதும் உள்ள கிராமங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமா நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

கிராமங்கள் தோறும் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்
X

அரியலூர் மாவட்டம், விளாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாணதிரையான்பட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் .ரத்ன பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்கு பின்னர், மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை வழங்கம் வகையில் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தகுதியான அனைவருக்கும் கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

எனவே, பொதுமக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் அரசு தெரிவித்துள்ளபடி முககவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியினை பின்பற்றுதல் மற்றும் அடிக்கடி சோப்புபோட்டு கைக்கழுவுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தகுதியான நபர்கள் அனைவரும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள், அரசு ஆரம்ப சுகாதாரத்தின் மூலமாகவோ மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

#இன்ஸ்டா செய்தி #தமிழ்நாடு #அரியலூர் #விளாங்குடி #கலெக்டர் #கொரோனா #தடுப்பூசி #கிராமங்க்ள் #முகாம் #விழிப்புணர்வு #முகக்கவசம் #சமூகஇடைவெளி #vilage #besafe #covid19 #covidcase #famouse #bus #coronavirus #covidcamp #coronatest #stayhome #staysafe #instanews #tamilnadu #ariyalur

Updated On: 13 May 2021 11:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்