/* */

கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி உயிருடன் மீட்பு

திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டியை, தீயணைப்புத்துறை மற்றும் போலீஸார் பத்திரமாக மீட்டனர்.

HIGHLIGHTS

கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி உயிருடன் மீட்பு
X

ஆற்றில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்ட மூதாட்டி.

திருமானூர் அடுத்த குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மனைவி மூக்காயி(72). இவர் நேற்று காரைப்பாக்கம் பகுதி கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோது, தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். அப்போது, அவர் கையை மேலே தூக்கியபடி சத்தம் போட்டுள்ளார். 2 கி.மீட்டர் தூரம் ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில், திருமானூர் பகுதியில் ஆடுமேய்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் பார்த்து சத்தம் போட்டுள்ளார். அப்போது, திருமானூர் கொள்ளிடம் பாலத்தில் உள்ள சோதனை சாவடியில் பணியிலிருந்த கவிதா என்ற பெண் காவலர் இதுகுறித்து, திருமானூர் காவல் துறைக்கு தகவல் கொடுத்தார்.

விரைந்து வந்த காவல்ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான போலீஸார் மற்றும் தகவலறிந்து வந்த அரியலூர் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ஜெயக்குமார் தலைமையிலான வீரர்கள் திருமானூர் பாலத்திலிருந்து மேலும் 1 கி.மீட்டர் தூரத்திக்கு இழுத்துச் செல்லப்பட்ட மூதாட்டியை திருமானூர் சுடுகாடு பகுதியில் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

கொள்ளிடம் ஆற்றில் மூதாட்டி 3 கி.மீட்டர் தூரம் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், உயிருடன் பத்திரமாக மீட்ட காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினரை போலீஸார் பாராட்டினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை நேற்று ஏற்படுத்தியது.

Updated On: 22 Nov 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...