/* */

அரியலூர் மாவட்டத்தில் சாலைகளை தரமானதாக அமைக்க கலெக்டர் உத்தரவு

அரியலூர் மாவட்டத்தில் சாலைகளை செப்பனிடும் போது தரமானதாக அமைக்கவேண்டும் என கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டு உள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் சாலைகளை தரமானதாக அமைக்க கலெக்டர் உத்தரவு
X

அரியலூர் மாவட்டத்தில் பழுதடைந்த சாலை (கோப்பு படம்)

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் பழுதான சாலைகளை மீண்டும் செப்பனிடும்போது ஒப்பந்ததாரர் சாலை பணி மேற்பரப்பினை முழுவதுமாக சுரண்டி எடுத்துவிட்டு அதே அளவுக்கு அமைக்க வேண்டும்.

ஒப்பந்ததாரரால் சாலையின் மேற்பரப்பு சுரண்டி எடுக்கப்படும் பணி மேற்கொள்ளப்படவில்லையெனில் தொடர்புடைய ஒப்பந்ததாரர் பெயர் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும். அதற்குரிய இழப்பீடு தொகை தொடர்புடைய ஒப்பந்ததாரரிடமிருந்து வசூலிக்கப்படும்.

புதிய சாலைகள் அமைக்கும் பொழுது, சாலையின் இருபுறங்களிலும் உள்ள வீடுகளை மனதில் கொண்டு அவற்றின் மிகாமல் சாலை அமைக்கப்பட வேண்டும். தேவைப்படின், அமைக்கப்படவிருக்கும் சாலையின் அகலத்திற்கேற்ப சாலையை அமைக்க வேண்டும்.

சாலைகள் மேம்படுத்துதல் மற்றும் பழுதுபார்த்தல் பணி மேற்கொள்ளும் போது ஏற்கனவே, போடப்பட்டுள்ள அடுக்குகள் முற்றிலும் அகற்றப்பட்ட பின்னர் தான் புதிய அடுக்குகள் போடப்பட வேண்டும். மேலும், வீடுகளின் கருத்தில் கொள்ளாமல் சாலையின் அளவை அதிகரிக்கக்கூடாது.

மேலும், சாலை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளும் குடியிருப்புகளின் பக்கவாட்டில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் வீடுகளுக்குள் மழைநீர் வராமல் சாலையில் விழும் மழைநீர் சரியாக வெளியேற்றப்படும்.

www.tnrd.gov.in என்ற இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் இணையதள வாயிலாக புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இது சம்மந்தமாக எந்தவொரு புகாரையும் இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம்/

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 8 Oct 2021 5:33 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?