/* */

அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

10-வது தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற ஷர்வானிகா மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வாழ்த்துப் பெற்றார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
X

தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவி அரியலூர் கலெக்டர் ரமணசரஸ்வதியிடம் வாழ்த்து பெற்றார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட கலெக்டர் .பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று (23.05.2022) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 325 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், உடையார்பாளையத்தைச் சேர்ந்த செல்வி ஏ.எஸ்.ஷர்வானிகா என்பவர் ஒடிசாவில் நடைபெற்ற 7-வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான 10-வது தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற கோப்பை மற்றும் பரிசுத்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

மேலும், இம்மாணவி இப்போட்டியில் கலந்துகொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.30,000க்கான காசோலையினை ஏற்கனவே இம்மாணவியின் தந்தையிடம் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 23 May 2022 2:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  2. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  4. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  5. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  6. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி
  7. லைஃப்ஸ்டைல்
    நான் வணங்கும் அன்னைக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. தேனி
    தேனியில் அன்னையர் தின மாவட்ட செஸ் போட்டிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு மனைவிக்கு அமுதமொழிகள்! திருமண நாள் வாழ்த்துகள்
  10. தேனி
    வணிகமயமான வீரபாண்டி திருவிழா! நெருக்கடியில் தவிக்கும் பக்தர்கள்