/* */

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

HIGHLIGHTS

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
X

20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அன்புராஜ்.

அரியலூர் மாவட்ம் இரும்புலிக்குறிச்சி அடுத்த பரணம், பெருமாள் கோவில் தெரு சேர்ந்த செல்வராஜ் மகன் அன்புராஜ் (24). இவர் JCB ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு 2020 ஆகஸ்ட் மாதம் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக கூட்டி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இதுகுறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி இரும்புலிக்குறிச்சி காவல் நிலையம் ஆஜராகி அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் அன்புராஜ் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையயொட்டி போலீசார் அவரை கைது செய்து அரியலூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் தகுந்த ஆதாரங்களுடன் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த அரியலூர் சிறப்பு மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், குற்றவாளி அன்புராஜுக்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும், 60,000 ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.

Updated On: 23 March 2022 8:05 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...