/* */

அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 6 இடங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை 6 இடங்களில் எண்ணப்படுகிறது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் 6 இடங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை
X
கோப்பு காட்சி

அரியலூர் மாவட்டத்தில் 3 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 13 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆக மொத்தம் 16 பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதில் செந்துறை ஒன்றியம் கீழமாளிகை, ஜெயங்கொண்டம் ஒன்றியம் - உட்கோட்டை, ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் மற்றும் நாகம்பந்தல் ஆகிய 4 வார்டு உறுப்பினர் பதிவிஇடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து ஆண்டிமடம் ஒன்றியம் ஓலையூர், தா.பழூர் ஒன்றியம், மனகெதி மற்றும் நாயகனைப்பிரியாள் ஆகிய 3 ஊராட்சிகளுக்கு தலைவர் பதவி இடங்களுக்கும், அரியலூர் ஒன்றியம் ஓட்டக்கோவில் (வார்டு 6), திருமானூர் - ஒன்றியம் வெற்றியூர் (வார்டு 6), கோவிலூர் (வார்டு 1), செந்துறை ஒன்றியம் தளவாய் (வார்டு 9), சிறுகடம்பூர் (வார்டு 3), ஜெயங்கொண்டம் ஒன்றியம் ஜெ.தத்தனூர் (வார்டு 5), ஆண்டிமடம் ஒன்றியம் இடையக்குறிச்சி (வார்டு 2), இலையூர் (வார்டு 9), தா.பழூர் ஒன்றியம் அம்பாபூர் (வார்டு 8) ஆகிய 9 வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் ஆக மொத்தம் 12 பதவியிடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் நடைபெற்றது.

நடைபெற்ற தேர்தலில் 5669 ஆண் வாக்காளர்களும், 5663 பெண் வாக்காளர்களும் சேர்த்து 16,332 வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர்.

இறுதி வாக்குப்பதிவு நிலவரப்படி 4321 ஆண் வாக்காளர்களும், 4595 பெண் வாக்காளர்களும் சேர்த்து 8916 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

அரியலூர் ஒன்றியத்தில் 79.08 % வாக்குகளும், திருமானூர் ஒன்றியத்தில் 85.43 % வாக்குகளும், செந்துறை ஒன்றியத்தில் 67.30 % வாக்குகளும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் 83.31 % வாக்குகளும், ஆண்டிமடம் ஒன்றியத்தில் 77.30% வாக்குகளும், தா.பழூர் ஒன்றியத்தில் 79.96% வாக்குகளும் சேர்த்து, மாவட்டம் முழுவதும் 78.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பதிவான வாக்குப்பெட்டிகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டு மூண்றடுக்கு பாதுகாப்பில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. 24மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை 12பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அரியலூர், செந்துறை, திருமானூர், ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஆறு ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த ஊராட்சி ஆணையர்களுக்கும், தேர்தல் பொருப்பு அலுவலர்களும் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 11 Oct 2021 5:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்