/* */

அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

10,000க்கும் மேற்பட்ட பணிவாய்ப்பு : மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க மாவட்ட கலெக்டர் அழைப்பு.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்
X

அரியலூர் மாவட்ட 10,000 க்கும் மேற்ப்பட்ட பணிவாய்ப்பு மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க மாவட்ட பெ.ரமண சரஸ்வதி அழைப்பு.

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்(மகளிர் திட்டம்) மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் அரியலூர் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 28.11.2021 அன்று தத்தனூர் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (ஆசுஊ) வளாகத்தில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் துறை நிறுவனங்கள் மேலும் திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார்;துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் பெறும் மனுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவுகள் ஏதும் இரத்து செய்யப்படமாட்டாது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

இம்முகாமில் 18 வயது முதல் 35 வயது வரையிலான 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை பயின்றவர்கள், பொறியியல். ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள பங்கேற்று பயனடையலாம். மேலும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான திறன் பயிற்சியினை பெறுவது தொடர்பாக தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத்தின் மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு பெறுவது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் (OMCL) மூலம் ஆலோசனைகள் வழங்குவதற்கும், வேலைவாய்ப்பு தொடர்பான உதவிகள் பெறுவதற்காக மாதிரி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்திற்கும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.

எனவே இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மேற்கண்ட தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வி விவரங்களை பதிவு செய்து பங்கேற்று பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Nov 2021 6:29 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  4. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  7. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  8. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  10. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...