/* */

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு

அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யப்படுகிறது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன், மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று, தங்களது பள்ளிக்கு நேரில் வருகை புரிந்து, பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

04.10.2021 நாள் முதல் 18.10.2021 நாள் வரை வேலைவாய்ப்பு பதிவுப்பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும்.

பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய 04.10.2021 தேதியே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.

மேலும் https://tnvelaivaaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத்துறை இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவ மாணவியர்களும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், மேற்படி பதிவுகள் மேற்கொள்ளும் பணியின் போது அரசு விதித்துள்ள கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல், அவ்வப்போது கைகளை சோப்பினால் கழுவுதல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட அறிவுரைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 8 Oct 2021 10:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்