/* */

ஊரக வளர்ச்சித்துறை வளர்ச்சிப்பணிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர்

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.23.60 இலட்சம் மதிப்பீல் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்

HIGHLIGHTS

ஊரக வளர்ச்சித்துறை வளர்ச்சிப்பணிகளை  பார்வையிட்ட மாவட்ட கலெக்டர்
X

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.23.60 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டார்


அரியலூர் மாவட்டம், தா.பழுர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி அரியலூர் மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் பொதுமக்களின் தேவை அறிந்து வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டம், தா.பழுர் ஊராட்சி ஒன்றியம், வெண்மான்கொண்டான் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டார்.

இதில் வெண்மான்கொண்டான் ஊராட்சியில் வெண்மான்கொண்டான் மூப்பன் கொட்டகை தெருவில் 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார்சாலைப் பணியையும், வெண்மான்கொண்டான் பள்ளிக்கூடத் தெருவில் மாவட்ட ஊராட்சி 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறு பாலம் கட்டுமான பணியையும், 15வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.6.40 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிப் பணியையும், வடகடல் மற்றும் வெண்மான்கொண்டான் கிராமங்களில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் மூன்று தனிநபர் வீடுகள் கட்டுமான பணியையும் என மொத்தம் ரூ.23.60 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி பார்வையிட்டார்.

இப்பணிகளைப் பார்வையிட்டு தார்சாலை பணிகளில் சாலையின் இருபுறமும் மழைநீர் செல்லும் வகையில் வரத்து வாரிகளை சீரமைக்கவும், பொதுமக்கள் செல்லும் வகையில் பாலத்தின் உயரத்தை சரி செய்யவும், தனிநபர் இல்லக் கட்டுமானப் பணிகளை முறையாக மேற்கொள்ளவும் மேலும் முடிவுற்ற பணிகளை உரிய முறையில் பராமரிக்கவும், நடைபெறும் பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களைக்கொண்டு கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 3 Aug 2022 12:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.