/* */

ஊர்க்காவல் படையினருக்கு சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊர்க்காவல் படையினருக்கு சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

ஊர்க்காவல் படையினருக்கு சைபர் குற்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

அரியலூர் மாவட்டம் ஊர்க்கால் படையினருக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், ஊர்க்காவல் படையினருக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நேற்று ஏற்படுத்தப்பட்டது.

மாவட்ட எஸ்.பி. கே.பெரோஸ் கான் அப்துல்லா மேற்பார்வையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விளக்கப்படங்கள் மூலம் ஊர்க்காவல் படையினருக்கு சைபர் குற்றங்களின் வகைகள், அதனால் ஏற்படும் மன உளைச்சல் மற்றும் பண இழப்புகள் குறித்தும், எவ்வாறு முன்னெச்சரிக்கையாக தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், சைபர் குற்றங்கள் குறித்து www.cybercrime.gov.in என்ற NCRP இணையத்தில் எவ்வாறு புகார் அளிப்பது, பண இழப்பு ஏற்பட்டால் உடனடியாக 155260 என்ற இலவச தொலைபேசி எண்ணில் புகார் அளிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஊர்க்காவல் படையினர் தங்களை அணுகும் மக்களுக்கு இது குறித்த தகவலை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் எடுத்துக்கூறப்பட்டது.

நிகழ்ச்சியில், ஏ.டி.எஸ்.பி. திருமேனி, சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன், மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Dec 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்