/* */

அரியலூர் மாவட்டதில் கொரோனா தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு

அரியலூர் மாவட்டதில் மூன்றாம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டதில் கொரோனா தடுப்பூசி முகாம்: கலெக்டர் ஆய்வு
X

அரியலூர் மாவட்டதில்  கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் அறிவுரையின்படி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தகுதியுடைய நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த வாரங்களில் நடைபெற்ற மாபெரும் முதல்கட்ட தடுப்பூசி முகாமில் 382 முகாம்களில் 39386 தகுதியுடையவர்களுக்கும், இரண்டாம் கட்டமாக நடைபெற்ற 209 முகாம்களில் 18312 தகுதியுடைய பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக மாபெரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி 6 ஒன்றிய பகுதிகளில் 236 முகாம்களும், 2 நகராட்சி பகுதிகளில் 10 முகாம்களும், 2 பேரூராடசி பகுதிகளில் 14 முகாம்களும் என மொத்தம் 260 முகாம்கள் நடைபெற்று வருகிறது.

அதன்அடிப்படையில், இன்று அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழப்பழுவூர் அரசு உயர்நிலைப்பள்ளி, திருமானூர் ஊராட்சி மன்ற அலுவலகம், ஏலாக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி, காமரசவல்லி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட கடம்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாகமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தடுப்பூசி செலுத்த வருகை தந்த பொதுமக்களிடம் 18-வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும், தங்கள் வீடுகளில் உள்ளவர்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களிடம் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும் எனவும், மேலும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் பயன்கள் குறித்து அருகிலுள்ள பொதுமக்களுக்கும் தெரிவித்து 100 சதவீதம் கொரோனா செலுத்தப்பட்ட மாவட்டமாக அரியலூர் மாவட்டத்தை மாற்றிட அனைத்து பொதுமக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பொதுமக்களிடம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, கோட்டாட்சியர் ஏழுமலை (அரியலூர்), துணை ஆட்சியர் (சமூகபாதுகாப்புத்திட்டம்) குமார், வட்டாட்சியர் ராஜமூர்த்தி மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Updated On: 26 Sep 2021 7:50 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்