/* */

அரியலூரில் கொரோனா சித்தா புத்துணர்வு மையம்

கொரோனா நோயாளிகள் சித்தா புத்துணர்வு மையத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்ர் ரத்னா தெரிவித்தார்.

HIGHLIGHTS

அரியலூரில் கொரோனா   சித்தா புத்துணர்வு மையம்
X

அரியலூர் கலெக்டர் ரத்னா விடுத்துள்ள செய்தி்க்குறிப்பில் கூறியிருப்பதாவது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில், கொரோனா நோயாளிகளுக்கான 150 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு சித்தா கொரோனா புத்துணர்வு மையம் செயல்பட்டு வருகிறது.

இம்மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருந்துகள், கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் நாள்தேறும் காலை 7 மணிக்கு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து வாய் கொப்பளித்தல், நடைபயிற்சி, யோகா மற்றும் மூச்சுப்பயிற்சி போன்றவை நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

மேலும், தினமும் மூன்று வேளையும் ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் நோய்தொற்று அறிகுறிகளுக்கேற்ப சித்த மருந்துகளான அமுக்கராசூரணம், நெல்லிக்காய் லேகியம், காய்ச்சலுக்கு பிரம்மானந்த பைரவ மாத்திரை, சளி, இருமலுக்கு தாளிசாதி வடகம், ஆடாதோடை, மணப்பாகு, தலைவலிக்கு நீர்க்கோவை மாத்திரை, பெயின் பாம், நுகர்வு தன்மைக்கு ஓமப்பொட்டணம், உடல்வலிக்கு விஷ்ணு சக்கர மாத்திரை போன்ற மருந்துகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், இவ்வளாகத்தில் மனக்கவலையைப் போக்க பாரம்பரிய விளையாட்டுகளை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சித்தா கொரோனா மையத்தில் பயனாளிகள் யாரும் நேரிடையாக அனுமதிக்கப்படமாட்டாது.

அரியலூர் மாவட்ட மருத்துவமனை வளாகத்திற்கு சென்று முறையாக பதிவு பெற்ற பின்னர், அனைத்து பரிசோதனைகளின் முடிவுகளை பெற்ற பின்னர் கொரோனா சித்த புத்துணர்வு மையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பொதுமக்கள் பாரம்பரிய மருத்துவத்துடன் இணைந்து கொரோனா நோயிலிருந்து விடுபட்டு நலன் பெற சித்தா புத்துணர்வு மையத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.

Updated On: 19 May 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  2. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  3. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  4. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  5. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  6. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  7. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  8. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்