/* */

தனியார் உர விற்பனை நிலையங்களை அரியலூர் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

அரியலூர் மாவட்டத்தில் தனியார் உரவிற்பனை நிலையங்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தனியார் உர விற்பனை நிலையங்களை அரியலூர் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
X

அரியலூர் மாவட்டத்தில் தனியார் உரவிற்பனை நிலையங்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மைத் துறையின் சார்பில் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமும், அங்கீகார உரிமம் பெற்ற தனியார் உரவிற்பனை கடைகள் மூலமும் உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் தா.பழுர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தனியார் உரவிற்பனை நிலையங்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதில், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், சுத்தமல்லி தனியார் உரவிற்பனை ஆலோசனை மற்றும் இடுபொருள் விற்பனை நிலையம், நடுவலூர் சாலையில் உள்ள தனி;யார் உரம்விதை பூச்சி மருந்து கடை ஆகிய தனியார் நிறுவனங்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், தனியார் உரவிற்பனை நிலையங்களில் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் இருப்பு, உரங்களின் விலை, உரங்கள் இருப்புப் பதிவேடு, விற்பனைப் பதிவேடு, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட விற்பனை ரசீது, உரங்களின் சரியான எடை அளவு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விற்பனையாளர்களிடம் கேட்டறிந்தும், பதிவேடுகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்யவும், விற்பனை நிலையத்தில் அனைத்து பதிவேடுகளையும் முறையாக பராமரிக்கவும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, விவசாயிகளுக்கு உரங்கள் உள்ளிட்ட பொருட்களை சரியான விலையில் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்வதுடன், விதிமுறைகளை மீறி செயல்படும் தனியார் உரவிற்பனை நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்மந்தப்பட்ட வேளாண் அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.
Updated On: 3 Aug 2022 1:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்