/* */

அரியலூர் மாவட்டத்தில் ஊட்டம் தரும் காய்கறித் தோட்ட திட்டம்

அரியலூர் மாவட்டத்தில் ஊட்டம் தரும் காய்கறித் தோட்ட திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் ஊட்டம் தரும் காய்கறித் தோட்ட திட்டம்
X

பைல் படம்.

தமிழ்நாடு முதலமைச்சர் 6.12.2021 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்திட்டத்தின் கீழ் ரூ.225 மானிய விலையில் மாடித்தோட்டத் தளைகளையும், ஊரகப்பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைப்பதை ஊக்குவிப்பதற்காக ரூ.15-க்கு 12 வகை காய்கறி விதைத்தளைகளையும் நோய் எதிர்ப்புசக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்துத் தளைகளையும் பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் ரூ.3.37 இலட்சம் மதிப்பில் 500 எண்கள் மாடித்தோட்டத் தளைகள் ரூ.1.35 இலட்சம் மதிப்பில் 3,000 எண்கள் காய்கறி விதைகள் அடங்கிய தளைகள் மற்றும் ரூ.3 இலட்சம் மதிப்பில் 4,000 எண்கள் ஊட்டச்சத்து செடிகள் அடங்கிய தளைகள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. இதன் பயனாக இத்திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 4,200 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இதனை அரியலூர் மாவட்ட விவசாயிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Updated On: 28 April 2022 11:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  2. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  4. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  7. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  8. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்