/* */

ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்கும் நோக்கம் இல்லை: வைகோ பேட்டி

ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்கும் நோக்கம் இல்லை என்று வைகோ பேட்டி அளித்துள்ளார்.

HIGHLIGHTS

ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்கும் நோக்கம் இல்லை: வைகோ பேட்டி
X

வைகோ.

ம.தி.மு.கவை தி.மு.க. வோடு இணைக்கும் நோக்கம் இல்லை என்று வைகோ கூறினார்.

ம.தி.மு.க.வை தி.மு.க வோடு இணைத்து விடலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுக்கு கட்சியின் அவை தலைவரும் மூத்த நிர்வாகியுமான திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில் ம.தி.மு.க.வை அதன் தாய் கழகமான தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்றும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தன்னிச்சையாக எடுத்த நடவடிக்கைகளால் கட்சி பாதிக்கப்படுவது குறித்தும் சுட்டிக்காட்டி இருந்தார்.

அந்த கடிதத்திற்கு வைகோ பதில் கடிதம் அனுப்பவில்லை. இதற்கிடையில் இந்த பிரச்சனை பற்றி வைகோவின் மகனும் ம.தி.மு.க .தலைமை நிலைய செயலாளருமான துரை வைகோ திருப்பூர் துரைசாமிக்கு பதில் அளித்து கேள்வி எழுப்பி இருந்தார். அவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது இல்லை என்று திருப்பூர் துரைசாமி கூறியிருந்தார். இந்த கடித விவகாரம் அ.தி.மு.க.வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தி.மு.க.வுடன் கட்சியை இணைக்கும் நோக்கம் இல்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் ம.தி..முக. முக்கிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 70 சதவீதம் அளவிற்கு கட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. துரைசாமி அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளராக நான் அலட்சியப்படுத்துகிறேன். இரண்டு வருடங்களாக கட்சிக்கு வராமல் இருந்து விட்டு துரைசாமி தற்போது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

ம.தி.மு.க.வை தி.மு.க.வுடன் இணைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம். நிராகரிக்கிறோம். எல்லா இடங்களிலும் தேர்தல் அமைதியாக ஒற்றுமையாக நடந்தது. இனிமேல் அவரின் பேச்சுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். ம.தி.மு.க. 30 வருடங்களாக தனித்து இயங்குகிறது.அ.தி.மு.க. இனியும் தொடர்ந்து தனித்தே இயங்கும் என்றார்.

Updated On: 3 May 2023 7:33 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  5. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  6. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  7. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  8. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!