/* */

சுங்க கட்டணம் வசூலிக்க புதிய டெக்னாலஜி விரைவில் அறிமுகம் டோல்கேட் அகற்றம் :மத்திய அமைச்சர்

நாட்டில் ஹைவேசிலுள்ள அனைத்து டோல்கேட்டும் அகற்றப்பட்டு புதிய டெக்னாலஜி முறையில் டோல்கட்டணம் வசூல் செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

HIGHLIGHTS

சுங்க கட்டணம் வசூலிக்க புதிய   டெக்னாலஜி விரைவில் அறிமுகம்  டோல்கேட்   அகற்றம் :மத்திய அமைச்சர்
X

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  நிதின் கட்காரி

நாட்டிலுள்ள ஹைவே சுங்கச்சாவடிகள் அனைத்தும் விரைவில் அகற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மேலும் அதன் பிறகு சுங்க கட்டணம் வசூலிக்க புதிய டெக்னாலஜி அறிமுகப்படுத்த உள்ளதாகவும்அவர் தெரிவித்தார்.

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி நேற்று மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். உறுப்பினர்கள் சுங்கச்சாவடி வசூல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து அவர்கூறும்போது,இந்தியாவிலுள்ள ஹைவேஸ்களில் உள்ள டோல்கேட் அனைத்தும் விரைவில் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனை அகற்றிவிட்டால் போக்குவரத்துக்கு இனி தடை இருக்காது,நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமும் இனி இருக்காது.

மேலும் சுங்க கட்டணம் வசூலிக்க எந்த ஆட்களும் இருக்கமாட்டார்கள். ஆனால்அரசுக்கு இதன் மூலம் வருமானம் வரும், அதற்காக மாற்று வழிகள் இரண்டினை அரசு பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார்.


தமிழகத்தில் நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்க கட்டண வசூல் மையம் (மாதிரிபடம்)

2 வகையான முறை

செயற்கை கோள் முறையில் அதாவது வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் பேங்க் கணக்கில் இருந்து நேரடியாக டோல் கட்டணத்தினை வசூல் செய்யும் முறை .

மற்றொருமுறையாக வாகனத்திலுள்ள நெம்பர் பிளேட் அடிப்படையிலானது. அதாவது வாகனங்களிலுள்ள பழைய நெம்பர் பிளேட்களை அகற்றிவிட்டு அதற்கு மாற்றாக கம்ப்யூட்டரைசைடு நெம்பர் பிளேட் அனைத்து வாகனங்களிலும் பொருத்தப்படும். இதன் மூலம் புதிய சாப்ட்வேரைப் பயன்படுத்தி கட்டணத்தை வசூலிக்கலாம்.

ஹைவேசில் நீங்கள் துவங்கும் புள்ளியில் பதிவு செய்யப்படுவதுடன் ஹைவேசை விட்டு வெளியேறும்போது மீண்டும் பதிவு செய்யும் வசதி கொண்ட மிக எளிதான டெக்னாலஜி இது ஆகும்.

விரைவில் அமல்

வாகனம் ஓட்டியதற்கான மிக மிக சரியான தொகையினை மட்டுமே (வாகன உரிமையாளரின்) கணக்கிலிருந்து கழிவு செய்யப்படும் இந்த முறை குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

எந்த டெக்னாலஜியை பயன்படுத்தினால் இந்த திட்டம் பொருந்தும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. நெம்பர் பிளேட் டெக்னாலஜியை அறிமுகப்படுத்தினால் மிக எளிதாகஇருக்கும் என நம்புகிறோம்.உலகின் மிகவும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவோம். இந்த திட்டத்தினை 6 மாதத்திற்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்வோம் என்றார்.

Updated On: 8 Aug 2022 4:13 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!