/* */

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு

Bipin Rawath Dead -குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு
X

பிபின் ராவத்

Bipin Rawath Dead -குன்னூரில் இன்று பகல் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில், இந்திய ராணுவத்தின் தலைமைத்தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், 63, அவரது மனைவி மித்குலிஹா ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருன் சிங் படுகாயங்களுடன் வெல்லிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சூலூரில் இருந்து இன்று பகல் 11.45 மணியளவில் புறப்பட்ட இந்த ஹெலிகாப்டர், பகல் 12:20 மணியளவில், குன்னூர் காட்டேரி என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. பயங்கர சத்தத்துடன் தீப்பிடித்தபடி ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.



இந்த விபத்தில், இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தலைமை தளபதியாக இருந்து வந்த பிபின் ராவத் உள்பட 13,பேர் உயிரிழந்தனர். இவர், குன்னூர், வெலிங்டன்னில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரியில், இன்று நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிலையில், இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.


வீர தீரம் மிக்க ராவத்

இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதியாக, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டார். தனது வீரதீர செயல்களுக்காக, பரம் விஷிஸ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஸ்ட் சேவா, யுத் சேவா, சேனா, விஷிஸ்ட் சேவா, சிறப்புச் சேவை விருது, ஆபரேஷன் பராக்ரம், சைன்ய சேவா உட்படப் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

இவரது முழுப் பெயர், இவரது இயர் பெயர் பிபின் லக்ஷ்மண் சிங் ராவத். 1958 ஆம் ஆண்டு மார்ச் 16ல் பிறந்தார். சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வர்ட் பள்ளியில் பயின்ற படித்தார். அதை தொடந்து, கடக்வாஸ்லோவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்றார். பின்னர், 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி அகாடமியில் சேர்ந்தார்.

மனைவியுடன் ராவத்.

அங்கு, தனது தந்தை இருந்த அதே 11வது, கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறி, டேராடூனில் உள்ள இந்திய ராணுவப்பயிற்சி நிலையத்தில், இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை, ராவத் கவனித்து வந்தார்.

தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு

குன்னூருக்கும், ராவத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஏனெனில், வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பயிற்சி பெற்றுள்ளார்.

எழுத்து ஆர்வம் மிக்கவராகவும் ராவத் திகழ்ந்தார். இவர், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப் பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். சென்னை பல்கலைகழகத்தில், பாதுகாப்பு குறித்த படிப்பில், எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார்.

ராணுவத்தில் வீரதீரத்துடன் பணியாற்றியுள்ளார். பல்வேறு நெருக்கடிகளின் போது போர்த்தந்திர வியூகங்களை வகுத்து, எதிரிகளை திணறித்துள்ளார். சர்வதேச படைப்பிரிவுக்குத் தலைமையேற்று, காங்கோ குடியரசில் நடைபெற்ற பல நடவடிக்கைகளை, வெற்றிகரமாக நடத்தி காட்டியுள்ளார். காங்கோவிற்கு அனுப்பப்பட்ட 10 நாட்களிலேயே, தீவிர தாக்குதலை நடத்தி, காங்கோ படைகளுக்கு அளப்பறிய உதவி செய்துள்ளார். வடகிழக்கு மாநில எல்லைப்பகுதிகள், இந்திய, சீன எல்லைப்பகுதி என பல்வேறு களங்களில் பணியாற்றிய அனுபவம் பிபின் ராவத்திற்கு உண்டு.


கடந்த 1978-ல் லெப்டினென்ட், அடுத்ததாக 1984 இல் கேப்டன் பதவி, ஒன்பது ஆண்டுகளுக்கு பின்னர், லெப்டினென்ட் காலனெல், 2007ம் ஆண்டில் ப்ரிகேடியர், 2010இல் ராணுவ மேஜர் ஜெனரல், 2014ம் ஆண்டில் லெப்டினென்ட் ஜெனரல், 2017ஆம் ஆண்டு தலைமைத் தளபதி என படிப்படியாக ராணுவத்தில் உச்ச நிலைக்கு பிபின் ராவத் உயர்ந்தார்.

இந்த நிலையில், ராணுவத்தலைமை தளபதி ராவத் உள்ளிட்ட 13,பேரின் வீரமரணம், நாட்டையே அதிர்ச்சிக்கும், சோகத்திற்கும் உள்ளாக்கி இருக்கிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 3 April 2024 5:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்