கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி தற்கொலை சம்பவம்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்ததையடுத்து ஆசிரியர்களுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியர் கடும் உத்தரவு;

Update: 2022-07-17 09:15 GMT

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பேட்டி

திருவள்ளூர் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 18 வயது முதல் 59 வயது உள்ளவர்களுக்கான கோவிட் 19 தடுப்பூசி சிறப்பு முகாம் திருவள்ளூரில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டார். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களிடமும் தடுப்பூசி குறித்து கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து  செய்தியாளர்கள்  ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை குறித்து கேள்வி எழுப்பியதற்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்கெனவே ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவ மாணவிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாகவும்  தெரிவித்தார்.

மேலும் தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க மாணவர் மனசு என்ற திட்டம் மூலம் அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைத்திருப்பதாகவும், அதில் மாணவர்கள் தங்கள் பிரச்னைகளை அதில் தெரிவித்தால், மாணவர்களின் பிரச்னைகள் குறித்து விசாரித்து கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் மாணவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்றும் கல்வியாக இருந்தாலும், அவர்களது ஒழுக்கம் சார்ந்த விஷயங்களாக இருந்தாலும் அதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை அனைத்து ஆசிரியர்களுக்கும் இதுகுறித்த ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


Tags:    

Similar News