உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி குதிரை ரேக்ளா பந்தயம், கபடி போட்டி
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூரில் குதிரை பந்தயம் மகளிர் கபடி போட்டியை அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்.;
திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் குதிரை ரேக்ளா பந்தயம், மகளிர் கபடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஆவடி சாமு.நாசர் பரிசுகளை வழங்கினார்.
திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும்,திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 47 நாட்கள் தொடர் நிகழ்ச்சி மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.ஜெ.உமா மகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 23 வது நிகழ்ச்சியாக மகளிருக்கான கபடி போட்டி மாபெரும் ரேக்ளா குதிரை வெள்ளோட்ட பந்தயம் புல்லரம்பாக்கத்தில் நடைபெற்றது இதில் ஒன்றிய கழகச் செயலாளர் புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாவட்ட ரேக்ளா குதிரைகள் உரிமையாளர்கள் ,சாரதிகள் நல சங்கத் தலைவர் பி.நந்தகுமார், பி.கே.இ.கபிலன், ஊராட்சி தலைவர் மா.தமிழ்வாணன், பி.கே.இ.நாகராஜ், சந்தோஷ், முனுசாமி, மதியழகன், குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பல்வேறு மாவட்டத்திலிருந்து 14 மகளிர் கபடி அணிகள் 47 பந்தய குதிரைகள் பங்கேற்று போட்டியில் கலந்து கொண்டன. இதனை தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழும் தமிழர் நலத்துறை அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான ஆவடி சாமு.நாசர் தலைமை தாங்கி ரேக்ளா குதிரை வெள்ளோட்டம் மற்றும் மாபெரும் மகளிர்களுக்கான கபடி போட்டி தொடங்கி வைத்தார் இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகளை வழங்கினார்
தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஜே.ரமேஷ், மாநில இளைஞரணி துணை செயலாளர் பிரபு கஜேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ஜெயபாலன், காயத்ரி ஸ்ரீதரன், ஜி.விமல்வர்ஷன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் சங்கீதாசீனிவாசன், வழக்கறிஞர் வி.வினோத், வி.தியாகராஜன், திருவள்ளூர் மாவட்ட உதயநிதி ரசிகர் மன்ற செயலாளர் ஆர்.கிரண்குமார், ஒன்றியக் கழக நிர்வாகிகள் மனோகரன், விமலா குமார், டி.தென்னவன், கே.முகமது ரஃபி, சிற்றரசு, டி.முரளிகிருஷ்ணன், கே.சரவணன், வி.எஸ்.சதீஷ்குமார், சந்தோஷ், முனுசாமி, மதியழகன், குமார், சுமன், ராஜ்மோகன், ராஜாராம், இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்..