திருவள்ளூர் அருகே லாரி மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவன் தலை நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.;

Update: 2024-10-30 13:45 GMT

உயிரிழந்த பள்ளி மாணவன் தருண்.

திருவள்ளூர் அருகே லாரி மோதி பள்ளி மாணவன் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். அவருடைய மகன் யஷ்வந்த் என்ற தருண் (வயது 17). இவர் செவ்வாப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இன்று வழக்கம் போல் வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்ற மாணவன் அரை நாள் பள்ளி விடுமுறை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு சென்று தனது தந்தை இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு செவ்வாப்பேட்டையில் இருந்து ஆவடி நோக்கி அதி வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது செவ்வாப்பேட்டை காவல் நிலையம் அருகே வந்தபோது முன்னால் சென்ற டிப்பர் லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிரே வந்த லாரி மோதி தூக்கி வீசப்பட்டு தலை நசுங்கி பலியானார்.

சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று உடலை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பள்ளி மாணவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் செவ்வாப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News