பொன்னேரி அருகே உள்ள தேவத்தம்மன் கோவிலில் நாக சதுர்த்தி விழா கொண்டாட்டம்

பொன்னேரி தேவத்தம்மன் கோவில் நாக சதுர்த்தி விழாவில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.;

Update: 2024-11-05 15:15 GMT

தேவத்தம்மன் கோவிலில் நாக சதுர்த்தி விழா பெண்களால் கொண்டாடப்பட்டது.

பொன்னேரி தேவத்தம்மன் கோவிலில் நாக சதுர்த்தி விழாவில் ஏராளமான பெண்கள் பங்கேற்று புற்றுக்கு பால் ஊற்றி அம்மனை வழிபட்டு சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தேவத்தம்மன் நகரில் பழமைவாய்ந்த அருள்மிகு தேவத்தம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் நாக சதுர்த்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.


இவ்விழாவை முன்னிட்டுஅம்மனுக்காக விரதமிருந்து மஞ்சளாடை அணிந்து வந்த பெண்கள் கோவிலின் பின்புறம் சுயம்புவாக அமைந்துள்ள புற்றுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி பால் மற்றும் முட்டையை ஊற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதனை தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து மலரலரங்கரத்தில் ஊஞ்சலில் கம்பீரமாக வீற்றிருந்த தேவத்தம்மன் தாயாருக்கு மஹாதீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.விழா ஏற்பாடுகளை கோவில் பூசாரி காஞ்சனா மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News