வேலைக்கு செல்லாமல் இருந்ததை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே வேலைக்கு செல்லாத மகனை தாய் கண்டித்ததால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.;

Update: 2024-10-31 10:15 GMT

தற்கொலை செய்து கொண்ட சுதாகர்.

திருவள்ளூர் அருகே வேலைக்கு செல்லாமல் இருந்ததை தாய் கண்டித்ததால் மகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் வயலூர் ஊராட்சி சூரகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 24).இவர் படித்துவிட்டு கடந்த நான்கு வருடங்கள் ஆகியும் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

இதை அவரது கண்டித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 27ம் தேதியன்று சுதாகர் தன் தாயாரிடம் செலவிற்கு காசு கேட்டார்.ஆனால் அவர் வேலைக்கு செல்லாமல் இப்படி வீட்டில் இருந்து வருகிறாய் என கூறிய தன் மகனை பணம் கொடுக்காமல் கண்டித்துள்ளார்.

கோபித்துக் கொண்டு வெளியே சென்ற சுதாகர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இந்த நிலையில் நேற்று முன்தினம் சுதாகர் சூரகபுரம் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதை கண்ட அங்கிருந்தவர்கள் சுதாகரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மப்பேடு போலீசில் புகார் செய்யப்பட்டது.போலீசார் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து இறந்த சுதாகர் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து அவரின் உடலை குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

அவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால்  மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News