திருவள்ளூர் அருகே ஊராட்சி தலைவரின் மகனை கைது செய்யக்கோரி தர்ணா
திருவள்ளூர் அருகே வீடு முன் விரோதம் வீடு புகுந்து தாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் மகனை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.;
திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப் பெரும்புதூர் கிராமம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய்.இவரது மனைவி நான்சி. இவர்கள் வீட்டில் இருந்தபோது பட்டரைப் பெரும்புதூர் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் சத்யா என்பவர் முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவரை தன்னுடைய சக நண்பர்களான ஆண்டனி, கர்ணன், தருமன், தாவீது, மதன், கலைவாணன், ஆகியோரை தூண்டிவிட்டு சரமாரியாக தாக்கியதில் முகத்தில் படுகாயம் அடைந்த விஜய், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக கடந்த 23ஆம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து திருவள்ளூர் பி2 தாலுக்கா காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளரிடம் புகார் அளித்தும் புகாரை ஏற்றுக்கொள்ளாமல் எதிர் தரப்பினருக்கு சாதகமாக காவல்துறையினர் செயல்பட்டு வந்தனர். காவல் துறையினர் உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் விஜய் தரப்பினர் மனு அளித்தனர்.
அதனை தொடர்ந்து சத்தியா தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்த பின்பு காவல்துறையினர் அவர்களை கைது செய்யாமல் இருப்பதால், சத்தியா தரப்பினர் ஊருக்குள் நடமாடுகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அவருடைய ஊருக்குள் சென்ற போது சத்யாவின் கூட்டாளிகள் அவர்களை கொலை மிரட்டல் விடுகிறார்கள். நீங்கள் ஊருக்குள் வந்தால் உங்களை மறுபடியும் நாங்கள் உங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று கேலி, கிண்டல் செய்வதோடு கொலை மிரட்டல் விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் நீங்கள் யாரிடத்தில் புகார் அளித்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று பகிரமாக தெரிவிக்கின்றாராம். நாங்கள் பலமுறை புகார் அளித்தும் எவ்விதை நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்தனர் . நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பெயரில் பாதிக்கப்பட்ட நபர்கள் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.