சேலம் டவுன் தாம்பிராஸ் (பதிவு) கிளை சார்பில் நாளை பொதுக்குழுக்கூட்டம்
salem town tambras, general assembly meet சேலம் டவுன் தாம்பிராஸ் கிளையின் சார்பில் நாளை பொதுக்குழுக்கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மற்றும் கிளை நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். அனைவரும் குடும்ப சகிதம் கலந்துகொள்ள கிளைத்தலைவர் ஆடிட்டர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
சேலம் டவுன் தாம்பிராஸ் (பதிவு) கிளையின் சார்பில் நாளை மாலை சேலத்தில் பொதுக்குழுக்கூட்டம் நடக்கிறது.
சேலம் மாநகரில் பல்வேறு கிளைகள் தாம்பிராஸ் சார்பில் இயங்கி வருகின்றன. ஒவ்வொருகிளையின் நிர்வாகிகளும் மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனையின் பேரில் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் சேலம் மாவட்ட தாம்பிராஸ் சார்பில் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டி சிறப்பு பரிசுகள் கேடயம் ஆகியவைகள் வழங்கப்படுகிறது. அதோடு நவராத்திரி காலத்தில் ஒவ்வொரு கிளையும் சிறப்பு பூஜைகளை ஏற்பாடு செய்து ஒன்பது நாட்களும் சீரும் சிறப்புமாக கொண்டாடுகின்றனர். இதுமட்டும் அல்லாமல் படிக்க வசதியில்லாத மாணவ, மாணவிகளுக்கு சங்கத்தின் சார்பிலும், உறுப்பினர்கள் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்படுகிறது. சேலம் மாவட்ட சங்கத்தின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளை ஆண்டுதோறும் நிர்வாகிகள் நடத்திவருகின்றனர். சேலம் மாவட்ட சங்கத்தின் ஒரு கிளையான டவுன் தாம்பிராஸ் சார்பில் நாளை பொதுக்குழுகூட்டம் நடக்கிறது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
சேலம் டவுன் தாம்பிராஸ் (பதிவு) கிளையின் சார்பில் நாளை மாலை 4 மணிக்கு பொதுக்குழுக்கூட்டமானது சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள ஐயப்பன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்பன் பஜனை மண்டலி ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆஸ்ரமத்தில் நடைபெறுகிறது. இவ்வமயம் மாநில,மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். ஆகவே நமது கிளை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் குடும்ப சகிதம் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறோம். மேலும் இந்நிகழ்வில் பிற கிளை உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
இந்நிகழ்ச்சியானது கடவுள் வாழ்த்து, வேத கோஷம்,சங்க உறுதிமொழியேற்பு நிகழ்வோடு மாலை 4மணிக்கு துவங்குகிறது. பின் வரவேற்புரையும், கடந்த மூன்று ஆண்டுகளின் ஆண்டறிக்கை வாசித்தல், கடந்த 3 ஆண்டுகளின் வரவு -செலவு நிதி நிலை அறிக்கை தாக்கல், கிளை செயல்பாடுகள், கிளைஉறுப்பினர்களின் கருத்துகள், பிற கிளை நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களின் வாழ்த்துரை, மாவட்ட தலைவரின் எழுச்சியுரை, மாநில பொதுச்செயலாளர் சிறப்புரை, மாநில ஒருங்கிணைப்பாளரின் சிம்ம கர்ஜனை, மாநில தலைவரின் சிறப்பு எழுச்சியுரை, நன்றியுரையோடு முடிவடைகிறது. அதன் பின் ஸ்வஸ்தி வாசகம், சுவையான விருந்து நடக்க உள்ளது. எனவே சேலம் டவுன் கிளையின் உறுப்பினர்கள் மற்றும் பிற கிளையின் உறுப்பினர்கள் ஆகியோர் குடும்ப சகிதம் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பிக்கும்படி சேலம் டவுன் கிளை தலைவர் ஆடிட்டர் சரவணன், பொதுச்செயலாளர் ராகவேந்திரன், பொருளாளர் சுரேஷ் உட்பட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கேட்டுக்கொண்டுள்ளனர்