ஈரோட்டில் தள்ளுவண்டியில் மறைமுகமாக குட்கா விற்பனை

ஈரோட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, அதிகாரிகள் திடீர் சோதனை;

Update: 2025-03-20 09:10 GMT

ஈரோடு: காவிரி சாலையில் தள்ளுவண்டியில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 5.3 கிலோ குட்கா, 1.5 கிலோ பீடி மற்றும் சிகரெட்டை மாநகராட்சி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதற்காக கடை உரிமையாளருக்கு ₹25,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து, காவிரி சாலையில் உள்ள 20க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில் மளிகைக் கடைகள், டீக்கடைகள், தள்ளுவண்டிகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது, கருங்கல்பாளையத்தை சேர்ந்த பாபுவின் தள்ளுவண்டியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 5.3 கிலோ குட்கா, 1.5 கிலோ பீடி மற்றும் சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது. புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததால், அதிகாரிகள் பாபுவுக்கு ₹25,000 அபராதம் விதித்தனர்.

அதிகாரிகள், சட்டவிரோத புகையிலை விற்பனைக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் இவ்வாறு விற்பனை செய்யும் கடைகள் குறித்து தகவல் அளிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News