நாமக்கலில் அறிவியல் கண்காட்சி

நாமக்கலில் அறிவியல் கண்காட்சியில் 150 மாணவியர்கள் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்;

Update: 2025-03-20 09:50 GMT

அறிவியல் கண்காட்சி 150 மாணவியர் பங்கேற்பு

நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட இந்த கண்காட்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதிலுமிருந்து 150 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவியர் 150 படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். இந்த படைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்தல், ஐ.சி.யு. வார்டில் உள்ளவரின் நிலையை அறியும் கருவி, இயற்கை உணவுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழான அறிவியல் திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த அறிவியல் கண்காட்சியைப் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பார்வையிட்டனர். இதில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படவுள்ளது.

Tags:    

Similar News