வெடி பொருட்கள் பாதுகாப்பு கூட்டம்
நாமக்கலில் வெடி பொருட்கள் குறித்த முக்கிய ஆலோசனை கூட்டம்,நாமக்கல் கலெக்டர் முக்கிய அறிவுரை;
வெடி பொருட்களை தவறாக பயன்படுத்த கூடாது
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து வெடி பொருட்கள் மற்றும் கல் குவாரி உரிமைதாரர்கள், வெடிமருந்து தயாரிக்க உரிமம் பெற்றவர்கள், வெடி பொருட்கள் மற்றும் பட்டாசுகள் இருப்பு வைத்து விற்பனை செய்யும் உரிமைதாரர்கள், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு உரிமைதாரர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். நாமக்கல் கலெக்டர் உமா தலைமை வகித்துப் பேசுகையில், "பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு உரிமம் பெற்ற வெடிபொருட்கள் உரிமைதாரர்கள், கல் குவாரி உரிமைதாரர்கள் வெடிபொருட்களை தவறாக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வெடி பொருட்களை கல் குவாரிகளுக்கு அனுப்பும்போது உரிய பாதுகாப்புடன் அனுப்ப வேண்டும். அதற்கான பதிவேடுகளையும் முறையாகப் பராமரிக்க வேண்டும். வெடிபொருட்களை உரிய விதிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.