சேலத்தில் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – ஊதிய நெறிமுறைகளை திருத்த கோரிக்கை;
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமாயி தலைமை வகித்தார். சத்துணவு, அங்கன்வாடி, கணினி இயக்குபவர், வருவாய் கிராம உதவியாளர், எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர், காச நோய் பணியாளர், குடும்ப நல ஆலோசகர், கொசு ஒழிப்பு பணியாளர், டேங்க் ஆப்ரேட்டர், தூய்மை பணியாளர், தூய்மை காவலர், ஆம்புலன்ஸ் தொழிலாளர் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளிலும் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலர் செல்வம், சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலர் வைத்தியநாதன், எய்ட்ஸ் கட்டுப்பாடு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் ஜெகஜோதி உள்ளிட்ட பல்வேறு சங்க முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.