தாரமங்கலத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு

தாரமங்கலம் பகுதியில் அழகுசமுத்திரம் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது;

Update: 2025-03-20 10:10 GMT

அங்கன்வாடி மையம் திறப்பு

தாரமங்கலம் அழகுசமுத்திரம் ஊராட்சியில் சேதமடைந்திருந்த அங்கன்வாடி மைய கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிதாக ஒரு மையம் அமைக்க அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31 லட்சம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று தி.மு.க.வின் தாரமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலர் அய்யப்பன் புதிய மையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அழகுசமுத்திரம் ஊராட்சி முன்னாள் தலைவி அறிவுக்கரசி, தி.மு.க.வின் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜா மற்றும் அங்கன்வாடி மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News