2,000 டன் நெல், விரைவில் ரேஷன் மூலம் விநியோகம்

மயிலாடுதுறையிலிருந்து 2,000 டன் நெல் ஈரோடு வந்தது,அரிசியாகும் பணி விரைவில் தொடக்கம்;

Update: 2025-03-20 10:40 GMT

ஈரோடு: மயிலாடுதுறையில் இருந்து ஈரோடு கூட்ஸ் ஷெட்டிற்கு, நேற்று ரயில் மூலம் 2,000 டன் நெல் மூட்டைகள் 42 பெட்டிகளில் கொண்டு வரப்பட்டது. இந்த மூட்டைகள் சுமை தொழிலாளர்கள் மூலம் இறக்கப்பட்டு, லாரிகளில் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக (TNCSC) குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விரைவில், இந்த நெல் தனியார் அரிசி அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அரிசியாக மாற்றப்படும். பின்னர், பொது விநியோக திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும்

Tags:    

Similar News