ஈரோடு பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சியின் அதிரடி

போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் நடவடிக்கை – ஈரோடு பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி அதிரடி;

Update: 2025-03-20 09:50 GMT

ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய 35க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் மாநகராட்சி அதிகாரிகளால் அகற்றப்பட்டன. பஸ் ஸ்டாண்டில் சாலையோரங்களில் முறையான அனுமதியின்றி சிலர் தள்ளுவண்டி கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதன் காரணமாக, பஸ்சிற்காக காத்திருந்த பொதுமக்கள் இடமில்லாமல் தவித்து, நடைபாதையில் நடந்து செல்ல கூட சிரமப்படுவதை நமது நாளிதழ் மார்ச் 17ஆம் தேதி வெளியிட்ட செய்தி உணர்த்தியது.

இதனையடுத்து, மாநகராட்சி துணை கமிஷனர் தனலட்சுமி உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதன்படி, நேற்று காலை மாநகராட்சி இளநிலை பொறியாளர் ஸ்வரன் சிங் தலைமையில், 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் இணைந்து, பஸ் ஸ்டாண்டில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தள்ளுவண்டி கடைகள், மேஜைகள், ரேக்குகளை அகற்றினர். அனைத்து பொருட்களும் குப்பை லாரியில் ஏற்றி அகற்றப்பட்டது.

இந்த நடவடிக்கையின் மூலம், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News