தொழில் வளர்ச்சிக்கு பச்சைக்கொடி, ஈரோடு கலெக்டர் அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி, தொழிற்சாலை அமைக்க விரைவான அனுமதி;
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கும், புதிய இயந்திரங்கள் நிறுவுவதற்கும் மற்றும் தொழில்துறை விரிவாக்கத்திற்கும் அனுமதி பெறுவது அவசியமாக உள்ளது.
இதற்காக, தொழில்முனைவோர் தனிநபர் ஓட்டுனர் உரிமம், வங்கி கணக்கு புத்தகம், அஞ்சலக அட்டை உள்ளிட்ட உரிய ஆவணங்களை, திட்ட வரைவுடன் இணைத்து, ஆன்லைனில் விண்ணப்பித்து கலெக்டரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், உரிய கட்டணத்தை செலுத்தியவுடன், அந்தந்த பஞ்சாயத்துகள் மூலம் விரைவாக பரிசீலனை செய்யப்படும். அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தார்.