ஈர நிலம் புகைப்படப் போட்டி : பங்கேற்க வனத்துறை அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ஈரநிலம் தொடர்பான புகைப்படப் போட்டியில் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

Update: 2022-01-20 10:30 GMT
கோப்பு படம் 

தமிழ்நாடு வனத்துறையின் மூலம் பிப்.2-ம் தேதி ஈர நிலங்கள் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்தான விழா, நாமக்கல் மாவட்டத்தில் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு மாநில ஈரநில ஆணைய உறுப்பினர் செயலரின் அறிவுரையின்படி நடத்தப்படவுள்ளது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக,  வரும் 24-ம் தேதி வரை இண்டர்நெட் மூலம் ஆன்லைனில் நடைபெறும்.  ஈரநிலம் தொடர்பான மாவட்ட அளவிலான புகைப்படப் போட்டியில் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அனைவரும், ஈர நிலங்கள் தொடர்பான போட்டோக்களை,  வரும் 24-ம் தேதி மாலை 5 மணிக்குள்,  dyfnamakkal@yahoo.co.in- என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

இப்போட்டியில்,  மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெறுவோர்களை, கலெக்டர் தலைமையிலான தணிக்கைக் குழு தேர்வு செய்ய உள்ளது என மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News