13 ஆண்டுக்குப்பின் நிரம்பிய மிகப்பெரிய தூசூர் ஏரி: மக்கள் உற்சாகம்

நாமக்கல் மாவட்ட மிகப்பெரிய தூசூர் ஏரி 13 ஆண்டுகளுக்குப்பின் நிரம்பி வழிந்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்நுதுள்ளனர்.

Update: 2021-11-28 08:45 GMT

நாமக்கல் நகரில் இருந்து துறையூர் செல்லும் மெயின் ரோட்டில், 8 கி.மி தொலைவில் தூசூர் கிராமத்தில் அமைந்துள்ளது தூசூர் ஏரி. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி சுமார் 350 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இது மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரியின் மூலம் சுமார் 850 ஏக்கர் ஆயக்கட்டு நிலம் பாசன வசதி பெருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையில் தொடர்ச்சியாக கன மழை பெய்யும் போது அங்கிருந்து காட்டாற்றின் வழியாக வரும் வெள்ள நீர், காரவள்ளி, நடுக்கோம்பை, சின்னக் குளம், பெரியக் குளம், பளையபாளயம் உள்ளிட்ட 6 குளங்கள் முதலில் நிரம்பும். பின்னர் வழிந்தோடும் உபரி நீர் தூசூர் ஏரிக்கு வந்தடையும். தொடர்ச்சியாக அதிகன மழை பெய்யும் காலங்களில் மட்டுமே தூசூர் ஏரி நிரம்பும்.

கடந்த ஒரு மாத காலமாக கொல்லிமலை, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கன மழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சேந்தமங்கலம் பகுதிகளில் இருந்த 6 குளங்களும் நிரம்பி தூசூர் ஏரிக்கு கடந்த ஒரு வாரமாக நீர் வரத்து அதிகரித்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் தூசூர் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. ஏரியில் மொத்தம் 66.10 மில்லியன் கன அடி நீர் நிரம்பி உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த ஏரி நிரம்பியுள்ளது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்த ஏரி முழுவதுமாக நிரம்பி உபரி நீர் வடிகால் வழியாக பாய்ந்து ஓடுகிறது. இந்த உபரி நீரானாது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரூர், ஆண்டாபுரம் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பிய பிறகு திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே காவிரி ஆற்றில் கலக்கும்.

தூசூர் ஏரி நிரம்பியதை அடுத்து ஆயிரக்கணக்கான பொது மக்களும், சிறுவர்களும் நிரம்பி ஓடும் தூசூர் ஏரியைக் கண்டு கழித்து நீரில் குழித்து மகிழ்ச்சி அடைகின்றனர். ஏராளமமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் உற்சாகத்துடன் செல்பி எடுக்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். 13 ஆண்டுகளுக்கு பிறகு தூசூர் ஏரி நிரம்பியதால் இச்சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News