நாமக்கல் சட்டசபை தொகுதியில் வேளாண்மை வளர்ச்சி திட்டம் துவக்கம்: எம்எல்ஏ பங்கேற்பு

நாமக்கல் சட்டசபை தொகுதியில் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் கருவிகளை எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

Update: 2022-05-24 02:30 GMT

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

தமிழகம் முழுவதும், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து, வீடியோகான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.

இதையொட்டி, நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட திருமலைப்பட்டி, கதிராநல்லூர், ஏளூர், சிவியாம்பாளையம், வகுரம்பட்டி, ஆரியூர், ராசிபாளையம் ஆகிய பஞ்சாயத்துக்களில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அப்பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான், கைத்தெளிப்பான், உளுந்து விதை, ஷியூமிக் ஆசிட், கே.பாக்டீரியா, பிளாஸ்டிக் கூடை, காய்கறி விதைகள், மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில், புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கவுதம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராம்குமார், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தரணிபாபு, பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குநர் ராஜகோபால், உதவி இயக்குனர்கள் பேபிகலா, செல்வி, தோட்டகலைத்துறை உதவி இயக்குனர் பூர்ணிமா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News