அக்னி நட்சத்திரம் துவங்கியதும் பலத்த மழை: நாமக்கல் பகுதியில் கூல் கிளைமேட்

அக்னி நட்சத்திரம் துவங்கியதும், நாமக்கல் பகுதியில் பலத்த மழையால் வெப்பம் தனிந்து கூல் கிளைமேட் நிலவியது.

Update: 2022-05-05 03:15 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கடும் வெய்யிலால் வெப்பநிலை 103 டிகிரிக்கும் அதிகமானது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். மதிய வேளையில் ரோடுகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. இரவு நேரத்திலும் வெப்பநிலை அதிகரித்ததால், வீட்டுக்குள் தூங்க முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் துவங்கியுள்ளது.

தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் பகல் நேர வெப்பநிலை மேலும் உயர்ந்து பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நாமக்கல் நகரில் மாலை 7.30 மணி முதல் 10.30 மணிவரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. இரவில் வெப்பம் தனிந்து கூல் கிளைமேட் நிலவியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். பல இடங்களில் சூறைக்காற்று வீசியதால் மின்சாரத்தடை ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விபரம் (மில்லிமீட்டரில்) : நாமக்கல் 10.10, எருமப்பட்டி 20, மங்களபுரம் 1.20, மோகனூர் 17, பரமத்திவேலூர் 6, புதுச்சத்திரம் 5, ராசிபுரம் 11.20, சேந்தமங்கலம் 9, கலெக்டர் ஆபீஸ் 6, கொல்லிமலை செம்மேடு 48. மாவட்டத்தில் மொத்தம் 133.50 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News