மாநில விளையாட்டுப் போட்டியில் தங்கம்: புதுச்சத்திரம் மாணவருக்கு எம்.பி., பரிசு

மாநில அளவிலான விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற புதுச்சத்திரம் மாணவருக்கு எம்.பி., ராஜேஷ்குமார் பரிசு வழங்கினார்.

Update: 2021-10-20 03:30 GMT

நாமக்கல், மாவட்டம், புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீபிரகாஷ். இவர் மாநில அளவிலான 2வது இளைஞர் தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் கோவாவில் நடைபெற உள்ள அகில இந்திய போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார்.

இந்நிலையில், அவரைப் பாராட்டி, எம்.பி ராஜேஷ்குமார் ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் அந்த மாணவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கவுதம், நாமகிரிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ராமசாமி, எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், நாமக்கல் தெற்கு நகர பொறுப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News