நாமக்கல்லில் முட்டை விலை 10 பைசா உயர்வு : ஒரு முட்டை ரூ. 5.20

Today Egg Price in Namakkal - நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் முதல் விலை ரூ.5.20 ஆனது.

Update: 2022-06-23 02:00 GMT

பைல் படம்.

Today Egg Price in Namakkal - நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 5.10ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டிய மைனஸ் விலை 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ.4.90 கிடைக்கும்.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 550, பர்வாலா 480, பெங்களூர் 525, டெல்லி 478, ஹைதராபாத் 482, மும்பை 542, மைசூர் 525, விஜயவாடா 491, ஹெஸ்பேட் 485, கொல்கத்தா 555.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.136 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 107 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News